ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில் சீன வீராங்கனை லீ நா சாம்பியன் பட்டம் வென்றார்.
சர்வதேச தர வரிசைப் பட்டியலில் 20-வதி இடத்தில் உள்ள சுலோவேகியா வீராங்கனை டொமினிகா சிபுல்கோவா-வை 7-6,6-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் லீ நா.
இது அவர் பெறும் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 2011.ல் பிரென்சு ஓபன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், கடந்த 2011-ஆம் ஆண்டு கிம் கிலிஸ்டர்ஸிடமும், 2013-ஆம் ஆண்டு விக்டோரியா அசெரென்ஸகாவிடமும் இறுதிப் போட்டியில் கோப்பையை நழுவ விட்டார் லீ நா. இந்த முறை ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவு சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
No comments:
Post a Comment