அல்-காய்தா, தலிபான் தீவிரவாதிகளோடு தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகளை கியூபா அரசு முடக்கியுள்ளது. இதற்கான உத்தரவை அந்த நாட்டு அதிபர் ரவுல் காஸ்ட்ரோ பிறப்பித்தார்.
பண மோசடி, தீவிரவாதத்துக்கு நிதியளிப் பது, ஆயுதங்களை வாங்க நிதியுதவி செய்வது ஆகியவற்றைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கியூபா அரசு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையால் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும், தீவிரவாதிகளுடன் நேரடியா கவோ மறைமுகமாகவோ தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகள் எவ்வித நோட்டீஸும் இன்றி முடக்கப்படும் என்றும் கியூபா அரசு அறிவித்துள்ளது.
தற்போது கியூபாவில் 7 வெளிநாட்டு வங்கிகள் செயல் பட்டு வருகின்றன. அந்த வங்கிகள் வாயிலாக தீவிரவாதிகளின் பணப் பரிமாற்றங்கள் நடை பெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே வெளிநாட்டு வங்கிகளின் செயல்பாடுகளும் தற்போது தீவிர ஆய்வுக்கு உள் படுத்தப்பட்டுள்ளன. அன்னிய முதலீட்டை அதிக மாக ஈர்ப்பதற்காக உலக நாடுக ளின் கோரிக்கையை ஏற்று கியூபா அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment